செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

குருபீடாதிபதியாக சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த குருக்கள் பதவியேற்பு : இந்துக் குருமார் அமைப்பு பாராட்டு..!

ஆயம் செய்திப்பிரிவு 20 நவம்பர் 2026, பி.ப 09:22 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
குருபீடாதிபதியாக  சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த குருக்கள் பதவியேற்பு : இந்துக் குருமார் அமைப்பு பாராட்டு..!

சைவ சமயத்திற்கும், அந்தண சிவாச்சாரியார் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில், சிவாச்சாரியார் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த குருக்கள், இந்து சமயத்தின் உயரிய பொறுப்பான குருபீடாதிபதி பதவியை ஏற்றுள்ளார்.

சைவ சமயத்திற்கும், அந்தண சிவாச்சாரியார் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில், சிவாச்சாரியார் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த குருக்கள், இந்து சமயத்தின் உயரிய பொறுப்பான குருபீடாதிபதி பதவியை ஏற்றுள்ளார்.


அவரது ஆன்மீகத் தகுதி, கல்விச் சிறப்பு, தலைமைத்துவ ஆற்றல், சமயப் பற்றுறுதி மற்றும் நீண்டகால சமய, சமூகப் பணிகளைக் கருத்திற்கொண்டு, சர்வதேச இந்து குருமார் அமைப்பின் வித்வத் சபையினரால் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆலயக் கும்பாபிஷேகங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், நல்லை ஆதீனத்தின் ஆன்மீகப் பணிகளிலும் ஆரம்பகாலம் முதல் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.


நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட சர்வதேச இந்து மத குருபீடத்தின் பாரம்பரியத்தையும் சமயப் பணிகளையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது தலைமைத்துவம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையின் அந்தண சிவாச்சாரியார்களுக்கு ஆன்மீக ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் அவர் பொறுப்பேற்றிருப்பது, சைவ சமய வளர்ச்சி, சிவாச்சாரியார் சமூக ஒற்றுமை மற்றும் இளைய தலைமுறையினரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ள சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த குருக்களுக்கு இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவாகமகலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் செயலாளர் சிவஸ்ரீ ச. சாந்தரூப குருக்கள் ஆகியோர் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!