பிரபல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமான Claude AI-ஐ உருவாக்கிய Anthropic நிறுவனம், அமெரிக்காவின் நாஸ்டாக் (Nasdaq) பங்குச்சந்தையில் அறிமுகமான முதல் நாளிலேயே 34% பங்கு உயர்வைப் பதிவு செய்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் அந்நிறுவனம் 81.3 பில்லியன் டொலர்களைத் திரட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக, Anthropic நிறுவனத்தின் மொத்தச் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டொலரைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், அந்நிறுவனத்தில் ஆரம்பகாலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் பலர் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி வளர்ச்சி, AI தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!