செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 04:00 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

ஆயம் செய்திப்பிரிவு 21 நவம்பர் 2026, பி.ப 05:04 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் 6.8 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் 6.8 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதனால் நாட்டின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய மற்றும் சர்வதேச தகவல்களின் அடிப்படையில் சுனாமி அபாயம் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.


இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!