சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) இலங்கையின் அழகிய தோற்றத்தைப் படம்பிடித்த விண்வெளி வீரர் அனில் மேனன், அந்தப் புகைப்படத்தைத் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
சுமார் 400 கிலோமீற்றர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படத்தில், இந்தியப் பெருங்கடலின் நீல நிறக் கடற்பரப்பால் சூழப்பட்ட இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் தென்பகுதி தெளிவாகத் தென்படுகின்றன. அத்துடன், சில பகுதிகளில் மேகக் கூட்டங்களும் காணப்படுகின்றன.
இந்தப் புகைப்படம் இலங்கை சமூக வலைத்தளப் பயனர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், விண்வெளியிலிருந்து நாட்டின் அழகைக் காண்பிக்கும் இந்தக் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!