இலங்கையில் வாகன இறக்குமதி வரி முறையை எளிமைப்படுத்துவதுடன், மின்சார வாகனங்களைப் பொதுமக்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வகையில் வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தின் வழிவகைகள் மற்றும் நிதி தொடர்பான குழு ஆலோசித்துள்ளது.
கடந்த நவம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், வாகன இறக்குமதி மற்றும் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது,
- தற்போதைய வாகன இறக்குமதி வரி முறையை எளிமைப்படுத்துதல்.
- மின்சார வாகன இறக்குமதிக்கு வரிச் சலுகைகளை வழங்குதல்.
- மின்சார வாகனங்களின் மின்கலங்களை மறுசுழற்சி செய்வதற்கான முறையை உருவாக்குதல்.
- மின்சார வாகனங்களுக்கான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல்.
- சூரிய மின்சக்தி மற்றும் மின்கல சேமிப்பு முறைகளை ஊக்குவித்தல்.
- சுங்க அனுமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக அரச நிறுவனங்களுக்கு இடையில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்.
உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், வாகன இறக்குமதி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!