செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, பி.ப 12:41 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், நாரஹேன்பிட்டியிலுள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சேவைகளுக்காக திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, பொதுமக்கள் குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 0112117116 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமாகவோ அல்லது https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சைபர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வழமையான சேவைகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!