சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை (டிசம்பர் 12) முன்னிட்டு, தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘அண்ணாமலை’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 1992ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தை, நவீன தொழில்நுட்பத்தில் 4K தரத்தில் மெருகேற்றி, Dolby Atmos ஒலித்தொழில்நுட்பத்துடன் மறுவெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இலங்கை உள்ளிட்ட உள்நாட்டு சந்தைகளிலும், வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான விளம்பரப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘அண்ணாமலை’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல், சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!