இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், 99ஆவது ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (Best Visual Effects) பிரிவுக்கான போட்டியில் முன்னேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பிரிவில் பரிசீலனைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 திரைப்படங்களைக் கொண்ட பட்டியலில் ‘ராமாயணா’ திரைப்படமும் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாகி வரும் இத்திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கான ஆரம்பக்கட்டத் தேர்வில் முன்னேறியிருப்பது இந்தியத் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் மூலம் சர்வதேசத் திரைப்பட அரங்கில் ‘ராமாயணா’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!