வியாழக்கிழமை, 26 நவம்பர் 2026 | 09:50 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
சினிமா

"விட்டுப் போன வாசலிலே" பதிவால் பரபரப்பு..! இப்போது அனிருத் - காவ்யா மாறன் வரவேற்பில் சிரித்த முகத்துடன் ஜோனிடா!

ஆயம் செய்திப்பிரிவு 26 நவம்பர் 2026, பி.ப 03:41 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
"விட்டுப் போன வாசலிலே" பதிவால் பரபரப்பு..! இப்போது அனிருத் - காவ்யா மாறன் வரவேற்பில் சிரித்த முகத்துடன் ஜோனிடா!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல பாடகி ஜோனிடா காந்தி, மணமக்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல பாடகி ஜோனிடா காந்தி, மணமக்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.


சென்னையில் நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோனிடா காந்தி, மணமக்கள் இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.


அந்தப் புகைப்படத்துடன், “Sweetest newlyweds” எனக் குறிப்பிட்டு புதுமணத் தம்பதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


அனிருத்தின் இசையில் பல பிரபல பாடல்களைப் பாடியுள்ள ஜோனிடா காந்தி, அவரது இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இதனால் அனிருத் ரசிகர்கள் அவரது வாழ்த்து பதிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பல ரசிகர்கள் ஜோனிடா திருமண வரவேற்பில் கலந்துகொண்டதை நேரில் பார்க்க முடியாமல் போனதாகவும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவருக்கு நன்றி என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


இதனிடையே, கடந்த மாதம் 21ஆம் திகதி ஜோனிடா காந்தி பகிர்ந்திருந்த சோகமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றும் பேசுபொருளாகியிருந்தது. ‘டூட்’ திரைப்படத்திற்காக அவர் பாடிய பாடலில் இடம்பெற்ற “விட்டுப் போன வாசலிலே” என்ற வரிகளைப் பகிர்ந்திருந்ததைத் தொடர்ந்து, அவர் காதல் தோல்வியை எதிர்கொள்கிறாரா என ரசிகர்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தனர்.


இந்நிலையில், அனிருத் – காவ்யா மாறனின் திருமண வரவேற்பில் ஜோனிடா மகிழ்ச்சியாகக் காணப்பட்டதுடன், புதுமணத் தம்பதியை அன்புடன் வாழ்த்தியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜோனிடா காந்திக்கும் நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!