வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026 | 11:55 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
அரசியல்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அதிரடி கைது! பின்னணி என்ன?

ஆயம் செய்திப்பிரிவு 27 நவம்பர் 2026, பி.ப 11:17 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அதிரடி கைது! பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை தமிழக காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை தமிழக காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவறான நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை தவெக தரப்பினர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.


இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த திரிசூலி என்பவர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என கேள்வி எழுப்பியது.


மேலும், தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இன்று அருள் விக்னேஷின் இல்லத்திற்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் தமிழக அரசியல் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்: #இந்திய பெருங்கடல்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!