பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனிடையே, குறித்த தேர்தல் வழக்கை ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 27) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால், பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!