ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2026 | 12:49 AM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஹைப்பர்சோனிக் Zircon ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடிய புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Perm-ஐ நவம்பர் 27ஆம் திகதி ரஷ்ய கடற்படையில் இணைத்தார்.
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
சினிமா

காதல் குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு! மீண்டும் காதல் தோல்வியா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆயம் செய்திப்பிரிவு 28 நவம்பர் 2026, மு.ப 01:23 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
காதல் குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு! மீண்டும் காதல் தோல்வியா? ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார், கடந்த சில நாட்களாகத் தனது மனவேதனையை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவுகளைப் பகிர்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகையும் இயக்குநருமான வனிதா விஜயகுமார், கடந்த சில நாட்களாகத் தனது மனவேதனையை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவுகளைப் பகிர்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்நிலையில், காதல் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து அவர் தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


அதில், "காதல் என்பது விளையாட்டான விடயம் அல்ல என்றும், உண்மையாக நேசிக்கவும், உறவில் அர்ப்பணிப்புடன் இருக்கவும் தயாராக இருப்பவர்கள் மட்டுமே காதலிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "வசதிக்காகக் காதலித்து மற்றவர்களின் நேரத்தையும் உணர்வுகளையும் வீணடிக்க வேண்டாம்" எனவும் தெரிவித்துள்ளார்.


வனிதாவின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.


இதற்கிடையில், வனிதா விஜயகுமார் கோவா சென்றுள்ளதுடன், அங்கு எடுத்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மன அமைதிக்காகவே அவர் கோவா சென்றிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


எனினும், வனிதாவின் இந்தப் பதிவுகளுக்கான உண்மையான பின்னணி குறித்து அவர் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

குறிச்சொற்கள்: #கோலிவுட்
ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!