இந்த ஆண்டில் தமிழ் திரைப்படத் துறையை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியவை குறிப்பிட்ட 5 திரைப்படங்கள் மட்டுமே எனத் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘சீன்’ ஆகிய மூன்று திரைப்படங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ மற்றும் முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆகிய திரைப்படங்களுமே இந்த ஆண்டில் தமிழ் சினிமாத் துறையைக் காப்பாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஐந்து திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமா துறைக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!