நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை எனத் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேட்டி ஒன்றில் பேசிய அவர், அஜித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் எந்தவொரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றும், இவ்வாறு நடந்துகொள்வது அவர்களது தலையில் ஏதோ கிரீடம் இருப்பதாக நினைத்துக்கொள்வது போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதே அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் ஒரு கட்டத்தில் அவர்கள் திரையுலகில் காணாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்தக் கருத்துகள் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!