ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2026 | 12:49 AM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஹைப்பர்சோனிக் Zircon ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடிய புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Perm-ஐ நவம்பர் 27ஆம் திகதி ரஷ்ய கடற்படையில் இணைத்தார்.
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு தடை!

ஆயம் செய்திப்பிரிவு 28 நவம்பர் 2026, மு.ப 10:43 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு தடை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் பாடங்களுடன் தொடர்புடைய விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!