ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2026 | 12:49 AM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஹைப்பர்சோனிக் Zircon ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடிய புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Perm-ஐ நவம்பர் 27ஆம் திகதி ரஷ்ய கடற்படையில் இணைத்தார்.
வேலைநிறுத்தம் செய்தாலும் பலனில்லை! தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி வைத்த செக்!
இலங்கை

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி- முட்டை விலை அதிகரிக்குமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆயம் செய்திப்பிரிவு 28 நவம்பர் 2026, பி.ப 01:38 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி- முட்டை விலை அதிகரிக்குமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


சந்தையில் தற்போது கோழி இறைச்சி போதிய அளவில் காணப்படுவதால் விலைகள் குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


நாட்டின் கோழி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான உற்பத்தி காணப்படுவதுடன், தேவையான அளவு இறைச்சியை சந்தைக்கு விநியோகிக்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி போதியளவு கையிருப்பில் உள்ளதால் விலைகள் பாரியளவில் அதிகரிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி குறைவடைந்துள்ளமையே விலை உயர்வுக்குக் காரணம் என சுட்டிக்காட்டினார்.


கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோழிப்பண்ணைகளைச் சூழ வைரஸ் நோய்கள் பரவியமையும் உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், மழைக்காலம் மற்றும் வெயில் குறைவான காலநிலையும் முட்டை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது சந்தையில் ஒரு முட்டை 39 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் முட்டை விலை சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


குறுகிய காலத்தில் முட்டை உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பது சாத்தியமற்றது என்பதால், கால்நடைத் தீவன மூலப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!