அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களை (Data Centres) அமைப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்களின் AI Data Centre-கள் அமைக்கப்பட்டால், அவற்றை சீனா கைப்பற்றக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்க நிறுவனங்களின் தரவு மையங்களை அமெரிக்காவிலேயே அமைத்து, நாட்டின் தொழில்நுட்பக் கட்டமைப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கொள்கையை மீறி வெளிநாடுகளில் Data Centre-களை அமைக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரி விதிக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு, உலகளாவிய AI முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!