செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

வெங்காயம், முட்டை விலை எகிறியது! மக்களைக் கலங்கடிக்கும் புதிய விலை!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, பி.ப 08:18 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
வெங்காயம், முட்டை விலை எகிறியது! மக்களைக் கலங்கடிக்கும் புதிய விலை!

இலங்கையின் பல்வேறு சந்தைகளில் கடந்த வாரம் உள்ளூர் சிவப்பு வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு சந்தைகளில் கடந்த வாரம் உள்ளூர் சிவப்பு வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


புறக்கோட்டை சந்தையில், சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை ரூ.527.60 இலிருந்து ரூ.675 ஆக அதிகரித்துள்ளது. இது 27.9% விலை உயர்வாகும்.


அதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.37.68 இலிருந்து ரூ.41.75 ஆக உயர்ந்துள்ளதுடன், இது 10.8% அதிகரிப்பாகப் பதிவாகியுள்ளது.


நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில், சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை ரூ.700 இலிருந்து ரூ.820 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளை முட்டை ஒன்றின் விலை ரூ.39.60 இலிருந்து ரூ.42 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில், சில மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.


அதற்கமைய, போஞ்சி ஒரு கிலோகிராம் ரூ.580 இலிருந்து ரூ.560 ஆகக் குறைந்துள்ளது.


கோலிப்ளவர் ஒரு கிலோகிராம் ரூ.720 இலிருந்து ரூ.700 ஆகக் குறைந்துள்ளது.


தக்காளி ஒரு கிலோகிராம் ரூ.680 இலிருந்து ரூ.650 ஆகக் குறைந்துள்ளது.


இதன்படி, கடந்த வாரம் சிவப்பு வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளை, சில மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!