செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2026 | 05:19 PM
ஆயம் மெனு
எங்களை பின்தொடருங்கள்
BREAKING NEWS
இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! திகதியை அறிவித்தார் பிரதமர்!

ஆயம் செய்திப்பிரிவு 22 நவம்பர் 2026, பி.ப 08:31 3 நிமிடம் வாசிப்பு
எழுத்தளவு:
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! திகதியை அறிவித்தார் பிரதமர்!

அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த மூன்றாம் கட்டச் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த மூன்றாம் கட்டச் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ளார்.


இதன்படி, அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாம் கட்டச் சம்பள உயர்வு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் விசேட செலவின அலகுகளுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, நேற்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


ஏற்கனவே இரண்டு கட்டச் சம்பள உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


அரசாங்கத்தின் அடிப்படைச் சம்பள உயர்வுத் திட்டத்தின் கீழ், முதலாவது மற்றும் இரண்டாவது கட்டச் சம்பள உயர்வுகள் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.


இதன் தொடர்ச்சியாக, மூன்றாவது கட்டச் சம்பள உயர்வு 2027 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை


அரச ஊழியர்களிடையே நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஆணைக்குழு, தனது அறிக்கையை 2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


குறித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரச ஊழியர்களின் நலன்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


மூன்றாம் கட்டச் சம்பள உயர்வு 2027 ஜனவரி முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயம் செய்திப்பிரிவு

ஆயம் செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

ஆயம் இணையதள விசேட நிருபர்கள் குழுமம்.

வாசகர் கருத்துக்கள் (0)

இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!